HAPPY CHRISTMAS!

Wednesday, December 16, 2009

அன்பாலயம்

அன்பே சிவம் ,அதுவே நிரந்தரம் .அன்பு அனைவரையும் அரவணைக்கும் ,தொண்டுள்ளம் மற்றும் அன்பு இல்லாவிடில் எத்தனை கோடி ஜென்மம் எடுத்தாலும் அத்வைத நிலையை கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது .
அன்பிட்கினியவர்களே இந்த உலகதிதில் உள்ள அனைத்து ஆத்துமாக்களும் அன்புள்ளம் கொண்டவர்களாகவும் ,பண்பனவர்களகவும் ,ஒழுக்கம் உள்ளவர்களாகவும் ,உருவாக்க வேண்டும் என்பதுதான் எனது கனவுகள். இதற்காக என்னையே தியாகம் செய்து வாழ விரும்புகிறேன். அன்னை திரேசாவின் தியாக மனப்பான்மையை மதிப்பவன்.யாதி,மதம்,இனம்,மொழி,வேற்றுமையை களைந்து அறியாமையினை இந்த சமுதாயத்திலிருந்து விலக்கி அறிவு நிலையினை ஏற்படுத்தி அனைவரையும் அன்புள்ளம் கொண்டவர்களாக உருவாக வேண்டும்.அன்புதான் வாழ்க்கையின் இலசியமாக எல்லோரிடமும் இருக்க வேண்டும்,அன்பிலற்கு இவ்வுலகம் இல்லை என்ற தன்மை உருவாக்க பட வேண்டும்.அனைவரும் தியாக மனப்பான்மை உள்ளவர்களாக மாற வேண்டும். . தற்போதைய இளைஞர்கள் ,சமுதாயத்தினர் இன்பம் என்ற போர்வையில் தேவை இல்லாத சிந்தனைகளையும் செயல்களையும் செயற்படுத்தி வருகின்றனர்.சமுதாயத்தில் நல்ல மனப்பான்மையை வளர்பதுதான் எமது நேக்கம்.இதற்காக பல விடயங்களை செய்ய முயலுகின்றோம்.இதற்கு நீங்கள் முற்றும் முழுதான ஆதரவினையும் ,பங்களிப்பினையும் நல்க வேண்டும்.ஆதரவு தருவீர்கள் என நம்புகிறேம்.
௧.அன்பு அறநெறிப்பாடசாலை
சிறுவர்களுடன் நல்ல விடயங்களை விதைப்பதனுடாக அவர்களை சமூதாயம் மதிக்க கூடிய மகான்களாகவும் ,அறிவாளிகளாகவும் ,சிந்தனை திறன் உள்ளவர்களாகவும்,சமுதாயத்தினை வழி நடத்த கூடிய வர்களாகவும் உருவாக்குதல்.

௨.அன்பு கல்வி நிலையம் .
கல்வியை போதிப்பது மட்டும் அல்லாது அவர்களது இலசியக் கனவுகளை வெலுவதட்குரிய வழிமுறைகளை உருவாக்கி கொடுத்தல்.

௩.அன்பு தியானம்,அன்பு யோகாசனம்,அன்பு வயனை,போன்றவைகளை செய்து அவர்களை உடல்,உள,ரீதியாகவும் ஆறு படுத்தல்.கவுன்சலின் உளவியல் ரீதியான விளக்கங்கள் ஒவ்வருவரையும் ,அணுகி பிரசனைகளை தீர்த்தல்.

௪.உலக தரத்துடன் விளையாடக்கூடிய வகையில திறமை உள்ளவர்களை ஊக்குவித்தல்.அதகுரியானவகையில பயிசிகளையும்,மனோ உறுதிஇணையும் வளர்த்தல்.

௫.அன்பு ஆத்மீக கருத்தரங்குகள்
கிழமையில ஒரு தரம் ஆத்மீக சம்மந்தமான நிகழ்வுகளை செய்தல்,போதனைகளை போதித்தல்.
என் அன்புக்கு உரியவர்களே இது மட்டும் மல்லது நிறைய விடயங்களை செய்வதகு நாம் தயாராக உள்ளோம்.உங்கள் ஒத்துழைப்பு இருந்தால் அனைவரையும் அன்பு நிறைந்தவர்களாக உருவாக முடியும்.நம்மளால் முடியாதது எதுவும் இல்லை.நல்லதையே நினைப்போம் ,நல்லதையே சிந்திப்போம் ,நல்லதையே பார்ப்போம்.அனைத்தும் நன்மையாக அமையும்.
பிறகின்ற வருடம் எல்லோருக்கும் சாந்தி,சமாதனம்,அன்பு, நிறைந்த வருடமாகவும் நினைத்த நல்ல காரியங்கள் நடைபெறக்கூடிய வருடமாகவும் அமைய வேண்டும்.
உங்களது கருத்துகளை எதிர் பார்க்கின்றோம்.

No comments:

Post a Comment