Saturday, December 26, 2009
சிந்தனை
எழுமின் விழிமின் கருதிய கருமம்
கை கூடும் வரை அயராது உழைமின் .
'நான் எதையும் சாதிக்க வல்லவன்'என்று சொல்.நீ உறுதியுடன் இருந்தால் ,பாம்பின் விஷம் கூட சக்தியற்றதாகி விடும் .
சிந்தனை
நீ எப்போதும் நில் .
ஒவ்வொன்றையும் கொடுத்துவிடு
பிரதிபலனாக ஒன்றையும் எதிர்பார்க்காதே
அன்பைக் கொடு
உதவியை கொடு
பணியைக் கொடு
உன்னால் இயன்ற அளவு சிறிதாவது கொடு
ஆனால் அதன் பொருட்டு விலை பேசுவதை ஒழித்து விடு
நிபந்தனைகளை ஏற்படுத்தாதே
நம்மீது நிபந்தனை ஏதும் சுமத்தாமல் இறைவன்
நமக்குக் கொடுப்பதைப்போல
நமது தாராள குணத்தால்
நாமும் கொடுப்போமாக
பிறருக்கொன்று வாழ்பவர்களே வாழ்பவர்கள்
மற்றவர்கள் நடை பிணத்துக்கு சமமானவர்கள் .
Wednesday, December 23, 2009



2004.12.26 உலகத்தையே கதிகலங்க வைத்த துயரமான நிகழ்வு என் வாழ்க்கையையும் பெரிதும் பாதித்தது .எனது கிராமம் அழகிய கடல்வளமும் ஆறும் ஒருங்கே சேர்ந்து இயற்கை வளங்களும் நிறைந்து அனைவரும் ஒற்றுமையாக வாழும் ஒரு சிறிய கிராமம் ஆகும்.இங்கு தமிழர் பறங்கியர் மற்றும் சிங்கள முஸ்லிம் இனத்தவரும் உள்ளனர்.இந்து சமயத்தினையும் கிறிஸ்தவ மதத்தையும் சேர்ந்தவர்கள் அநேகமானவர்கள்.இங்கு ச்ரிஷ்மஸ் என்றால் எல்லோருக்கும் கொண்டடம்தான்.,இதற்கு நாள் குறித்து விடுவோம்.24m திகதி யானதும் கிரிஷ்மஷ்சினை வரவேத்பதட்காக எல்லா இளைனர்களும் சேர்ந்து விடிய விடிய நடன நிகழ்சி வைத்து அனைவருக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை தெரிவிப்போம்.
இவ்வாறே 25m திகதி இரவு முழுதாக எல்லோரும் என்றுமே இல்லாத அளவுக்கு சந்தோசமாக இருந்தோம்.வாழ்கையின் கடைசி நாள் இதுதான் என்று புரியாமல் இன்பமாக பலர் கொண்டாடினர்.
நாங்கள் வழமையாக கடற்கரையிலே ஒன்று சேர்வது வழமை .அன்றும் வழமையாக எமது கடற்கரை மண்ணிலே அனைத்து நண்பர்களும் ஒன்று சேர்ந்து இதனை கொண்டாடினோம்.அன்றைய நாள் சந்தோசமாக கழிந்தது.26 அதிகாலை இரண்டு மணியளவில் வீட்டிக்கு சென்று நித்திரை கொண்டோம்.காலை எட்டு மணி போல எழும்பி முகம் கழுவி விட்டு அம்மா பிட்டு சாப்பிட சொன்னாங்க.நானும் சாப்பிடுத்து வழமையாக டிவி பார்ப்பது வழக்கம்.அன்றும் டிவி போடு ஒரு பாடுத்தான் பார்த்தேன்.கரண்ட் நின்று விட்டது.எனது அத்தான் கடல் தொழில் செய்பவர்.காலையில் நேரத்தோடு கடலுக்கு சென்று விடுவார்.அன்றும் நேரத்தோடு சென்றார்.அவர் கடல் வருவதை பார்த்து எமது வீதியால் சத்தம் போடு கொண்டு வந்தார்.என்னடா அத்தான் சத்தம் போடுகிறார் என்று வெளியே சென்று பார்த்தேன்.என்னத்தைப் பார்ப்பது கடல் பொங்கி வருவதைக் கண்டு ஆசரியம் அடைந்து அம்மா ஓடி வாங்க என்று எனது தந்தையையும் அம்மாவையும் கையோடு பிடித்துக் கொண்டு எந்த வித உடுப்பையும் எடுக்காமல் வெறும் மேலோடு ஓடினேன்.கடல் எங்களுக்கு பின்பே வந்து கொண்டு இருந்தது.இதகு மேல ஓட முடியாது இனி கடவுள்தான் பொறுப்பு என்று சொல்லி ஒரு வீட்டின் மேல் மாடியில் ஏறினோம் .ஏறி நின்று பார்த்தால் பக்கத்து வீட்டிக்கு மேலாக பிணங்கள் மிதந்து வருவதைக் கண்டு அலறினோம்.
ஒரு மாதிரியாக தண்ணீர் குறைவதைக் கண்டு இறங்கி ஒரு வாகனத்தில் ஏறி எல்லோரும் ஒதுங்கி நிற்கும் பாடசாலை ஒன்றுக்கு சென்றோம்.எங்கும் அளறல் சத்தமாகத்தான் இருந்தது.எனது தம்பி அவன் என்னை விட்டு பிரிந்தது இல்லை.அவன் எப்பொழுதும் என் மடியில்தான் சாயிந்து கொள்ளுவான்.அவன் இறந்த செய்தி அறிந்து என்னால் எனது உயிரையே பறித்துப் போனது போல தாங்க முடியாமல் தவித்தேன்.அவன் எனது அப்பாவின் தம்பியின் மகன் .முகத்துவாரம் என்ற பக்கத்து கிராமத்தை சேர்ந்தவன்.நான்தான் அவனை படிப்பிப்பது.அவனது உறவினர்கள் 20 பேர் இறந்தனர்.அத்துடன் என்னுடன் பழகிய நண்பர்களும்,நண்பிகள் சிலரும் இதில் இறந்தனர்,நானும் எனது குடும்பத்தினரும் நண்பர்களும் இந்த சோகத்தினை தாங்க முடியாமல் தவித்தோம்.எனது பல்கலைக்கழக நண்பர்கள்தான் எனது குடும்பத்தினையும் எனது உறவுகளையும் நண்பர்களையும் ஆறுதல் படுத்தி துணிகள் சாப்பாடு போன்றவைகளை தந்து எங்களுக்கு பக்கபலமாக நின்றார்கள்.
எம்மை விட்டு எத்தனை வருடம் ஆனாலும் அன் நிகழ்வுகள் எமதுமனதை விட்டு அகல முடியாது.
சுனாமி நினைவுகள்
Monday, December 21, 2009
அன்பு
Saturday, December 19, 2009
சிந்தனை
அன்பின் முலமாக செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டு வந்தே தீரும்.
அறிவு சுரங்கத்தைத் திறப்பதற்கான திறவு கோல் மன ஒருமைப்பாடு ஆகும்.
சிந்தனைத் துளிகள்
லட்சியத்திற்காக உன் உயிரையும் அர்ப்பணிக்கக் கூடியவனாக இருந்தால்தான் நீ ஒரு தலைவனாக இருக்க முடியும் .
Friday, December 18, 2009
அன்பாலயம்
எமது மின்னஞ்சல் முகவரி ஆலயம்.அன்பாலயம்.அன்பு@ஜிமெயில்.கம
ச்வாமிமுருகேசு.ப்லொக்ச்பொட்.com
சிந்தனைக்கு
Thursday, December 17, 2009
ANPALAYAM
- 004915775219251
- 00273253385585
- 0027837777140
Wednesday, December 16, 2009
அன்பாலயம்
அன்பிட்கினியவர்களே இந்த உலகதிதில் உள்ள அனைத்து ஆத்துமாக்களும் அன்புள்ளம் கொண்டவர்களாகவும் ,பண்பனவர்களகவும் ,ஒழுக்கம் உள்ளவர்களாகவும் ,உருவாக்க வேண்டும் என்பதுதான் எனது கனவுகள். இதற்காக என்னையே தியாகம் செய்து வாழ விரும்புகிறேன். அன்னை திரேசாவின் தியாக மனப்பான்மையை மதிப்பவன்.யாதி,மதம்,இனம்,மொழி,வேற்றுமையை களைந்து அறியாமையினை இந்த சமுதாயத்திலிருந்து விலக்கி அறிவு நிலையினை ஏற்படுத்தி அனைவரையும் அன்புள்ளம் கொண்டவர்களாக உருவாக வேண்டும்.அன்புதான் வாழ்க்கையின் இலசியமாக எல்லோரிடமும் இருக்க வேண்டும்,அன்பிலற்கு இவ்வுலகம் இல்லை என்ற தன்மை உருவாக்க பட வேண்டும்.அனைவரும் தியாக மனப்பான்மை உள்ளவர்களாக மாற வேண்டும். . தற்போதைய இளைஞர்கள் ,சமுதாயத்தினர் இன்பம் என்ற போர்வையில் தேவை இல்லாத சிந்தனைகளையும் செயல்களையும் செயற்படுத்தி வருகின்றனர்.சமுதாயத்தில் நல்ல மனப்பான்மையை வளர்பதுதான் எமது நேக்கம்.இதற்காக பல விடயங்களை செய்ய முயலுகின்றோம்.இதற்கு நீங்கள் முற்றும் முழுதான ஆதரவினையும் ,பங்களிப்பினையும் நல்க வேண்டும்.ஆதரவு தருவீர்கள் என நம்புகிறேம்.
௧.அன்பு அறநெறிப்பாடசாலை
சிறுவர்களுடன் நல்ல விடயங்களை விதைப்பதனுடாக அவர்களை சமூதாயம் மதிக்க கூடிய மகான்களாகவும் ,அறிவாளிகளாகவும் ,சிந்தனை திறன் உள்ளவர்களாகவும்,சமுதாயத்தினை வழி நடத்த கூடிய வர்களாகவும் உருவாக்குதல்.
௨.அன்பு கல்வி நிலையம் .
கல்வியை போதிப்பது மட்டும் அல்லாது அவர்களது இலசியக் கனவுகளை வெலுவதட்குரிய வழிமுறைகளை உருவாக்கி கொடுத்தல்.
௩.அன்பு தியானம்,அன்பு யோகாசனம்,அன்பு வயனை,போன்றவைகளை செய்து அவர்களை உடல்,உள,ரீதியாகவும் ஆறு படுத்தல்.கவுன்சலின் உளவியல் ரீதியான விளக்கங்கள் ஒவ்வருவரையும் ,அணுகி பிரசனைகளை தீர்த்தல்.
௪.உலக தரத்துடன் விளையாடக்கூடிய வகையில திறமை உள்ளவர்களை ஊக்குவித்தல்.அதகுரியானவகையில பயிசிகளையும்,மனோ உறுதிஇணையும் வளர்த்தல்.
௫.அன்பு ஆத்மீக கருத்தரங்குகள்
கிழமையில ஒரு தரம் ஆத்மீக சம்மந்தமான நிகழ்வுகளை செய்தல்,போதனைகளை போதித்தல்.
என் அன்புக்கு உரியவர்களே இது மட்டும் மல்லது நிறைய விடயங்களை செய்வதகு நாம் தயாராக உள்ளோம்.உங்கள் ஒத்துழைப்பு இருந்தால் அனைவரையும் அன்பு நிறைந்தவர்களாக உருவாக முடியும்.நம்மளால் முடியாதது எதுவும் இல்லை.நல்லதையே நினைப்போம் ,நல்லதையே சிந்திப்போம் ,நல்லதையே பார்ப்போம்.அனைத்தும் நன்மையாக அமையும்.
பிறகின்ற வருடம் எல்லோருக்கும் சாந்தி,சமாதனம்,அன்பு, நிறைந்த வருடமாகவும் நினைத்த நல்ல காரியங்கள் நடைபெறக்கூடிய வருடமாகவும் அமைய வேண்டும்.
உங்களது கருத்துகளை எதிர் பார்க்கின்றோம்.
Tuesday, November 17, 2009
Friday, October 9, 2009
உன் சாம்பல் கூட சாதனை படைக்கும்
எனது பெயர் சிவப்பிரகாசம் மனோகரன்
என்னை சோமகாந்தன் என்றும் அழைப்பர்
நான் ௧௯௮௨.௧௧.௨௫ பழுகாமத்தில் பிறந்தவன்
கும்ப ராசி பூரட்டாதி ௨ம் பாதம்
நான் இப்ப பல்கலைக்கழகம் முடித்து விட்டு வேலை இல்லாமல் உள்ளேன் .
எனது இலட்சியம் நல்ல சமூக சேவையாளராக வாழ்வது .
இந்த சமுதாயத்தை அன்பும் ,ஒற்றுமை ,ஒழுக்கம் உள்ள சமுதாயமாக உருவாக்க வேண்டும் .
0779183272
Wednesday, October 7, 2009
முருகன் துதி
சரவண பவனே முருகையா -சரணம்
அன்பு தெய்வமே முருகையா
ஆறுதல் அளிப்பாய் முருகையா -சரணம்
பழனி தெய்வமே முருகையா
பக்த வத்ஸல முருகையா -சரணம்
அழகு தெய்வமே முருகையா
அனாத ரட்சகா முருகையா -சரணம்
கீதாசாரம்
Monday, October 5, 2009
Monday, July 13, 2009
Tuesday, July 7, 2009
கிழக்கு மாகாண வேலையில்லாப் பட்டதாரிகளின் சாத்வீக அமர்வு- நாளாந்த அறிக்கை 07.07.2009

கிழக்குமாகாணத்தில் 2004-2008 வரையான காலப்பகுதியில் வெளிவாரியாகவும் உள்வாரியாகவும் பட்டப்படிப்பை முடித்து இதுவரை நியமனம் கிடைக்கப்பெறாது வேலைவாய்ப்பு என்ற விடயம் கனவாகிப்போயுள்ள நிலையில் உள்ள கிழக்குமாகாண பட்டதாரிகள் நியமனம்கோரி தாம் இதற்கு முன்னர் பல தடவைகள் நடத்திய கவனயீர்ப்புப்போராட்டங்களெவையு
கிழக்குமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத் தலைவர் ஜெயராஜ் கருத்துக்கூறுகையில், ”இந்த சாத்வீகப்போராட்டமே நியமனம் கோரும் எமது இறுதிப்போராட்டமாக இருக்கும். ஏனெனில் இந்த சாத்வீக அமர்வானது எமது கோரிக்கைக்குத் தீர்வு கிடைக்காதவரையில் இடைநிறுத்தப்படப்போவதில்லை என்ற ஒருமித்த கருத்து எமது சங்க உறுப்பினர்கள் மத்தியில் உறுதியான நிலையில் உள்ளது” என்றார். அவர் தொடர்ந்து கூறுகையில் எமது போராட்டமானது வெளிக்கொணரப்படுவதில் ஊடகங்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. பத்திரிகைகள் பலவும் அன்றாடம் எமது சாத்வீக அமர்வு குறித்த செய்திகளை வெளியிட்டு வருகின்றன. அந்த ஊடகங்களுக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். இவ்வாறு பல ஊடகங்கள் எமது போராட்டத்துக்கு முன்னுரிமை வழங்கி செய்திகளை வெளியிடுகின்ற போதிலும் குறிப்பிட்ட ஒருசில தமிழ் இலத்திரனியல் ஊடகங்களின் பாராமுகம் வேதனைக்குரியதாக உள்ளது என்றார்.
இப்போரட்டத்தின் முன்னேற்றம் குறித்துக் கருத்துரைத்த ஜெயராஜ் அவர்கள்,
1.கிழக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சி(UNP) உறுப்பினர்களான மாசிலாமணி, சசிதரன் போன்றோர் எமது சாத்வீகப்போராட்டம் நடைபெறும் இடத்துக்கு வருகை தந்து எமது சங்க உறுப்பினர்களுக்கு ஆறுதல்மொழிகளையும் தெரிவித்துச்சென்றுள்ளனர். இவர்கள் இருவரும் எமது போராட்டம் நியாயமானது என்பதை ஏற்றுக்கொண்டதோடு, 21.07.2009 அன்று இடம்பெறவுள்ள மாகாணசபை அமர்வின்போது இவ்விடயம் தொடர்பாகத்தாம் மாகாணசபையிலே எடுத்துக்கூறி வலியுறுத்தவுள்ளதாகவும் வாக்குறுதியளித்துள்ளனர். மேலும் இப்போராட்டத்திலே ஈடுபட்டுள்ள பெண்களின் பரிதாபநிலை தொடர்பாகக் கவனஞ்செலுத்திய எதிர்க்கட்சி உறுப்பினர் சசிதரன் அவர்கள் எமது சாத்வீகப்போராட்டம் நடைபெறும் இடத்திலே லைற்(light) வசதியை ஏற்படுத்தித்தருவதற்கான ஏற்பாட்டையும் செய்துதவினார்.
2.(ஈ.பி.ஆர். எல்.எப்)கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் அவர்களும் எமது போராட்டம் நடைபெறும் இடத்துக்கு விஜயம் செய்து எமக்கு நம்பிக்கயூட்டக்கூடிய விதத்தில் ஆறுதல் வார்த்தைகளை கூறிச்சென்றார். எம்முடன் உரையாடிய மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் அவர்கள் எமது கோரிக்கை நியாயமானது என்பதை ஏற்றுக்கொண்டதோடு, இதுவரை பட்டதாரிகள் நியமனம் தொடர்பாக மாகாணசபையிடமோ மத்திய அரசிடமோ எவ்வித ஏற்பாடுகளுமில்லை எனத்தெரிவித்தார்.இதுதொடர்பாக தான் தனிப்பட்டரீதியாகவும் கட்சிரீதியாகவும் மாகாணசபைக்கு அழுத்தம் கொடுப்பதோடு இவ்விடயத்தை மத்திய அரசுக்கு எடுத்துச்செல்வதற்கும் ஆவன செய்வதாக வாக்குறுதியளித்தார். பட்டதாரிகள் விடயத்தில் காலாகாலமாக இத்தகைய இழுத்தடிப்பே இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இவ்விடயத்தில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாணத்திலே ஒரு விசேட நடைமுறையைக்கொண்டுவந்து நியமனம் வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்படவேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.
3.கிழக்குமாகாண முதலமைச்சர் சனிக்கிழமை இரவு எம்மை நேரடியாக வந்து சந்தித்தார். எம்மோடு உரையாடிய முதலமைச்சர்
”கிழக்கு மாகாணசபையால் தற்போதைக்கு நியமனம் எதுவும் வழங்கக் கூடிய நிலை இல்லை. மாகாணசபையின் அனைத்து உறுப்பினர்களும் அழுத்தம் கொடுத்து மத்திய அரசினூடாக, தற்போதைக்கு நியமனம் வழங்கக் கூடிய நிலையிலுள்ள விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர், கொலனி உத்தியோகத்தர்களுக்கான சுமார் 350 வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கையெடுப்பதாக முதலமைச்சர் தெரிவித்தார்.
4. 6 வது நாள் திங்கட்கிழமை அகில இலங்கை வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் சுஜித(சுஜித்) எம்மை வந்து சந்தித்தார். எமது போராட்டத்துக்கு இயலுமானவரையில் தமது சங்கம் உதவும் என அவர் தெரிவித்ததோடு செய்தியாளர் மாநாடொன்றை ஏற்பாடு செய்து எமது போராட்டத்தின்பாலான கவன அதிகரிப்பை ஈர்க்க முயற்சி செய்வதாக அவர் வாக்குறுதியளித்ததாகவும் , எமது போராட்டத்துக்கு பொதுமக்களும் வர்த்தக சங்கத்தினரும் ஏனையோரும் கொடுத்துவரும் ஆதரவு பாராட்டத்தக்கது என்றும் அவர்களுக்கு நாம் மிகவும் நன்றியுடையவர்களாக உள்ளோம் எனவும் கூறினார். எமது போராட்டம் தற்போது பலமடைய ஆரம்பித்துள்ளது அனைத்துப்பட்டதாரிகளும் போராட்டத்தில் இணைந்து வருகின்றனர் இப்போராட்டத்தில் பட்டதாரிகளின் பெற்றோர்களையும் இணைத்துக்கொள்வது தொடர்பாகவும் கவனஞ்செலுத்துகிறோம் என்றார்.
-செயலாளர்
கி. மா. ப. ஒன்றியம்
























